• Apr 30 2024

தளபதி 68 படத்தின் கதை இது தானா?- அதிடியாக வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 6 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் தனது 68 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பூஜை நடந்து முடிந்த நிலையில் இன்று அந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.

குறிப்பாக விஜய் அவர்களின் இளமையான அந்த தோற்றம், அவருடைய ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உற்சாகப்படுத்தி வருகிறது என்றே கூறலாம். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.


ஏற்கனவே இந்த திரைப்படத்திற்காக ஒரு பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் அண்மையில் சவுத் ஆப்பிரிக்காவில் இந்த படத்தில் வரக்கூடிய ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

தளபதி 68 திரைப்படத்தின் அனைத்து மொழிகளுக்கான ஆடியோ உரிமத்தை பிரபல T-Series நிறுவனம் பெற்றுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இப்படியான நிலையில் தளபதி 68 படத்தின் கதை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,இப்படம் டைம் டிராவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகவும் இதிநவீன ஏ.ஐ தொழில் நுட்பம் மூலம் இளமை தோற்றத்தில் விஜய்யை வைதது பாடல் காட்சியை படமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement