• Apr 27 2024

யோகிபாபுவின் மகளின் பிறந்தநாளுக்கு மனைவியுடன் சென்ற ஜெயம் ரவி- வைரலாகும் வீடியோ

stella / 6 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் யோகி பாபு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக அட்லி  அவர்களுடைய ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


மேலும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் அவர் நாயகனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சினிமாவில் இப்படி பிஸியாக இருக்கும் நேரத்தில் நேற்றைய தினம் தன்னுடைய மகள் பரணி கார்த்திகாவின் முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஷால், சூர்யா,விஜய் சேதுபதி,கார்த்தி  உள்ளிட்ட பலர் நடிகர்கள் யோகி பாபுவின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில்,நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியுடன் வந்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement