• May 04 2024

அடடே எமிஜாக்சனின் மகனா இது ?- அதுக்குள்ள இவ்வளவு பெரிய மனுஷனாக வளர்ந்திட்டாரே- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரிட்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து ஐ தெறி தங்கமகன் எந்திரன் 2.0 கெத்து போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.


இப்படி தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த எமி ஜாக்சன், லண்டனை சேர்ந்த ஜார்ஜ் என்கிற தொழிலதிபரை காதலிக்க தொடங்கியதும் சினிமாவிலிருந்து விலகினார்.


திருமணம் செய்யாமலேயே லிவ்விங் டுகெதர் முறையில் சில ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்த எமி ஜாக்சனுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.


திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி, திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து பிரிந்தது. இதையடுத்து ஜார்ஜ் உடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி தங்களது பிரிவை உறுதி செய்தார் எமி. 


ஜார்ஜ் உடன் பிரேக் அப் ஆன சில மாதங்களிலேயே மீண்டும் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து அவருடன் டேட்டிங்கும் செய்து வருகின்றார். இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement