• May 18 2024

லோகேஷ்-க்கு முத்தம் கொடுத்து ஸ்பெஷல் பதிவை பதிவிட்ட பிரபலங்கள்..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய விருது வென்ற சண்டைக் காட்சி இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாரிசு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

அத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். அத்தோடு இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இந்த லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு தமது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் சண்டைக் காட்சி இயக்குனர்கள் அன்பறிவ் இரட்டையர்கள் ட்வீட் செய்துள்ளனர். அதில், "எங்கள் அன்பான தம்பி லோகேஷ் கனகராஜூக்கு  அருமையான மற்றும் பிளாக்பஸ்டர் ஆண்டாக இது அமைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் சொந்த இரத்த சகோதரர்களைப் போல எங்களை சொந்தமாக்குவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உண்மையிலேயே Bloody Sweet ஆக இருந்தீர்கள்! கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். வாழ்க நீ பல்லாண்டு!" என வாழ்த்து கூறி லோகேஷ் கனகராஜூக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

கேஜிஎப் படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement