• Apr 25 2024

Marriage எப்ப ஷெரின் மேடம்...புகைப்படத்தை பார்த்து கெமண்ட்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகை ஷெரின் ஹீரோயினாக அறிமுகமானவர்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


அதனை தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், ஜேடி மற்றும் விசில் ஆகிய படங்களில் நடித்தார்.விசில் படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.அப்படத்தில் இடம்பெற்ற " அழகிய அசுரா" பாடல் செம ஹிட்டாகியது.


அதன்பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆட தொடங்கினார்.அதன் பின்னரும் ஷெரினால் சினிமா துறையில் ஜொலிக்க முடியவில்லை.பட வாய்ப்புகளின்றி இருந்த ஷெரினிற்கு விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் பட வாய்ப்புக்கள் கிடைக்குமென எதிர்பார்த்த ஷெரினிற்கு ஏமாற்றமே கிடைத்தது.


இந்நிலையில் தற்போது  விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.இவ்வாறுஇருக்கையில் பாவாடை தாவனியில் போட்டோசூட் ஒன்றினை நடத்தி உள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை கூறி வரும் நிலையில் ரசிகர் ஒருவர் ” Marriage apa sherin madam 😊” என கேட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement