• Jun 04 2023

சஞ்சீவ் பற்றி அப்படி ஒரு விஷயத்தைக் கூறிய விஜய்யின் தந்தை... 'கிழக்கு வாசல்' சீரியலை விட்டு விலக இதுதான் காரணமா..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் கிடைத்து வருகின்றது. பொதுவாக விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் இலகுவாக ரசிகர்களைக் கவர்ந்து விடுகின்றனர்.அத்தோடு இதில் புதுப்புது சீரியல்களும் ஆரம்பித்து வருகின்றன. 


அந்தவகையில் தற்பொழுது ராதிகாவின் ராடன் தயாரிப்பு நிறுவத்தினால் தயாரிக்கப்படும் கிழக்கு வாசல் என்னும் சீரியல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதாவது 'கிழக்கு வாசல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சஞ்சீவ், ரேஷ்மா, எஸ்.ஏ.சி, ஆனந்த் பாபு என பல பிரபலங்களும் இதில் நடிக்க ஏற்கெனவே கமிட்டாகியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது தொடரின் பூஜையும் சமீபத்தில் தான் போடப்பட்டது, அத்தோடு இதன் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் சில காட்சிகள் நடித்த விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ்வை சீரியல் குழு திடீரென விலகிவிட்டனர்.


இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் நாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார். ஆகவே இந்த சீரியலிலிருந்து சஞ்சீவ் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி என கூறப்படுகிறது. 


அதாவது எஸ்.ஏ.சி தான் சஞ்சீவ் வயதானவர் போல் நாயகியுடன் இணைந்து காணப்படுகிறார், எனவே ஜோடியை உடனடியாக மாற்றுமாறு கூறியுள்ளாராம். இந்த விடயமானது ரசிகர்கள் பலருக்கும் ஷாக்கிங் ஆக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement