• Jul 04 2026

போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த எம்.எல்.ஏ எழிலன்.. - பின்னணி என்ன?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவரது இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதி ஆயிரம் விளக்கு தொகுதியில் வருவதால், அரசியல் சூழலும் அவரைச் சுற்றி கவனம் பெற ஆரம்பித்துள்ளது.


அந்த தொகுதியின் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான எழிலன், ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த சந்திப்பின் போது, தொகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தொகுப்பாக அவரிடம் வழங்கியதாகவும், அதனை பற்றி விரிவாக உரையாடியதாகவும் எழிலன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், ரஜினிகாந்த் போன்ற முக்கியமான நபரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பல்வேறு கருத்துக்களை கிளப்பி வருகிறது. சினிமா மற்றும் அரசியல் இணையும் இந்த நிகழ்வு, பொதுமக்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement