• May 05 2024

குக்வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவின் வீடு இது தானா?- ரொம்ப சூப்பராகத் தான் இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதிகா. இந்த படத்தைத் தொடர்ந்து தித்திக்குதே என இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இப்படங்கள் எதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அர்ஜுன் என்பவரைத் திருமணம் செய்ததோடு தனது குடும்ப வாழ்க்கையிலும் அக்கறை செலுத்தி வந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பற்றி டைட்டில் வின்னர் ஆனதோடு 5 லட்சம் பணத்தையும் பரிசாகப் பெற்றார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் பின்னர் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் பெற்றதோடு பிரபல்யமானவராகவும் வலம் வருகின்றார். அத்தோடு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இவருடைய அழகிய வீட்டை புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement