• Jan 19 2025

கத்தியில் டெலிட் செய்யப்பட்ட காட்சி இது தானா? படு வைரலாகும் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் முருகதாஸ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகிய படம் தான் கத்தி. இந்த படம் விவசாயம் பற்றியும் வயதானவர்களின் நிலை பற்றியும் எடுத்துக்காட்டி இருந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார்.

கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த படம், விஜய்யின் திரை வாழ்க்கையில் வசூலில் இரண்டாவது வெற்றி படமாக காணப்பட்டது. இதில் நடிகை சமந்தா விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக நடித்திருந்தார்.

மேலும் கத்தி படத்தில் நீல் நிதின் முகேஷ் என்பவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் விமர்சனம் ரீதியாக ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டாலும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.


இந்த நிலையில், விஜய் நடித்த கத்தி படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்று தற்போது படு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

கத்தி திரைப்படத்தில் கதிரேசன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் விஜய் நடித்து இருந்தார். அதில் ஜீவானந்தம் கேரக்டரின் டெலிட் செய்யப்பட்ட காட்சி தான் தற்போது இணையத்தில் உலா வருகின்றது.



Advertisement

Advertisement