• Feb 05 2026

துல்கருக்கே இப்படி ஒரு நிலைமையா.? ஹிந்தி ஷூட்டிங் ஸ்போர்டில் நிகழ்ந்த சம்பவம்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது ஷூட்டிங் அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகின் வெளிப்புறத்தில் பெரிய ஸ்டாராக திகழ்ந்தாலும், உள்ளே நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து துல்கர் தற்பொழுது பேட்டி அளித்துள்ளார். 


இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களிலும், ஊடக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துல்கர் அதன்போது, “ஹிந்தி படங்களின் ஷூட்டிங்குக்கு என்னோடு சேர்த்து இருவரை அழைத்துச் செல்வது வழக்கம். உட்கார இடம் இருக்காததால் ஷூட்டிங் தளத்திலேயே சுற்றிக் கொண்டிருப்போம். 

அவ்வளவு ஏன், சில நேரங்களில் மானிட்டரின் அருகில் சென்று அமர்வதற்கு கூட எனக்கு இடம் கிடைக்காது. அவர்கள் பார்வையில் ஒரு மிகப்பெரிய காரில் பல ஆட்களுடன் வந்தால் அவர் தான் ஒரு பெரிய ஸ்டார் என்கிற மனோபாவம் இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார். 


இந்த வார்த்தைகள், பாலிவுட்டில் நடக்கும் பெரும் படங்களின் பின்னணி சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் கூட இணைந்து செயல்படுகின்றனர். 

அதனால், சாதாரண நடிகர்கள் அல்லது துணை நடிகர்கள், ஷூட்டிங் தளத்தில் அமர்வதற்கும் இடம் இல்லாமல், நேரத்தை நிறைய நின்று அல்லது சுற்றிக்கொண்டு கழிக்க வேண்டிய நேரம் ஏற்படுகிறது என்பதனை துல்கர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement