• Feb 05 2026

சிக்கிட்டாரு மாதம்பட்டி ரங்கராஜ்.. இதைவிட DNA ப்ரூப் வேண்டுமா? ஜாயின் அடுத்த அட்டாக்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா தொடர்பான பஞ்சாயத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  அத்தோடு சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக மாதம்பட்டி ரங்கராஜை  அட்டாக் செய்து வருகிறார் ஜாய்.  அவர் தன்னை காதலித்தபோது எடுத்த வீடியோக்களையும் பப்ளிஷ் பண்ணி  வருகின்றார். 

எனினும் ரங்கராஜ் இதற்கு ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல்  தன்னுடைய வேலையில் பிஸியாக இருக்கின்றார்.  கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு திருமண விழா ஒன்றில் அவரும்  அவருடைய முதல் மனைவி ஸ்ருதியும் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படமும் வெளியாகி வைரல் ஆனது.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிசில்டா புகார் கொடுத்தார். அதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.  அதற்கு இடையில், ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் அந்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து, நான் தான் அப்பா என்று உறுதியானால் மட்டுமே அதற்கான பொறுப்பை ஏற்பேன் என்று ரங்கராஜ் தெரிவித்தார். 


ஆனாலும் இதுவரையில் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அவர் செல்லவில்லை. இதனால் தொடர்ச்சியாக அவர் தொடர்பான பதிவுகளை  பதிவிட்டு மாதம்பட்டியை சீண்டி வருகின்றார்  ஜாய்.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய குழந்தையின் கைவிரலில்  புகைப்படத்தையும்  மாதம்பட்டி ரங்கராஜின்  கைவிரல்கள் பிடித்திருக்கும் ஸ்டைலையும் ஒன்றித்து,  இதைவிட எதற்கு டிஎன்ஏ டெஸ்ட் வேண்டும்? என்று அவரை மீண்டும் சீண்டி உள்ளார் ஜாய் கிரிசில்டா.  தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகிறது. 


 

Advertisement

Advertisement