• Apr 28 2024

ரம்யா கிருஷ்ணனின் மகனா இது..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ஆரம்பத்தில் பல அம்மன் திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆயினும் இவரை சிறந்த நடிகையாக படையப்பா படமே அறிமுகப்படுத்தியது எனலாம். இப்படத்தில் நீலாம்பரி காரக்டர் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாகவே இருக்கின்றது. அத்தோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.


இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் முன்னணி நடிகையாக உயர்த்தியது.

30 ஆண்டுகளாக திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரம்யா கிருஷ்ணன் சின்னத் திரையிலும் கால் பதித்தார்.


தொகுப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாக கலசம், தங்கம், வம்சம் போன்ற தொடர்களில் நடித்திருந்தார்.கிரிக்கெட் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பிரபலங்கள் பலரை ஸ்டேடியத்தில் காண முடிகிறது. அந்த வகையில் இப்போது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் மேட்ச் பார்க்க வந்துள்ளார்.


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக ரம்யா கிருஷ்ணன் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement

Advertisement