• Jun 26 2024

தூள் பட வில்லி சொர்ணாக்கா தனது கடைசிக் காலத்தில் இப்படித் தான் வாழ்ந்தாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தமிழ்த் திரையுலகில் வில்லன் கதாப்பாத்திரத்தில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் நடித்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சொர்ணாக்கா என்கின்ற சகுந்தலா .

இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு என்னும் திரைப்படத்தின் மூலம் தனது சினிமாப் பயணத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படத்தில் சொர்ணாக்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானார்.

முதல் திரைப்படத்திலேயே சிறப்பாக நடித்ததை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான சிவகாசி திரைப் படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மாமியாராக நடித்து பிரபலமானார். சிறந்த நடிப்பிற்காக நந்தி விருதினையும் பெற்றார்.

பின்பு தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த இவர் தொடர்ந்து படவாய்ப்புக்கள் இல்லாததால் சினிமாவிலிருந்து விலகியதோடு கடைசிக் காலத்தில் கவனிக்க யாரும் இல்லாததால் ஐதராப்பாத்திலுள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென மரணமானார்.

இவர் இவ்வாறு பரிதாபமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தமது இரங்கலையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement