• Apr 26 2024

நடன இயக்குநர் சாண்டியின் மகனை பார்த்துள்ளீர்களா..?லேட்டஸ்ட் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நடன இயக்குநராக இருந்து பிரபல்யமானவர் தான் சாண்டி மாஸ்டர். இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய மானாட மயிலான என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராகவும், நடுவராகவும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 3 இலும் போட்டியாளராகப் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்று பிரபல்யமானார். இதில் கிடைத்த புகழால் ஏராளமான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வருகின்றார்.

சமீபத்தில் கூட கமல் நடிப்பில் வெளியாகி பெரிய லெவெலில் ஹிட் அடித்துள்ள விக்ரம் படத்தில் நடன இயக்குநராக இருந்தார் சாண்டி. இப்படத்தில் இடம் பெற்ற பத்தல பத்தல பாடல் வேற லெவெலில் ஹிட் அடித்தது. இது தவிர குடும்பத்துடனும் நேரம் செலவளித்து வருவார்.

அண்மையில் வெளிவந்த 3:33 படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில், சாண்டி தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement