• May 09 2024

பிறந்தநாளில் தனது அப்பாவுடன் பழனி முருகனை காணச் சென்ற நடிகர் கார்த்தி- வைரலாகும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் என்றும் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடும் சினிமாவில நுழைந்தவர் தான் கார்த்தி. இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவரது நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் விருமன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகக் காத்திருக்கின்றது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் 45வது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரும் இன்று காலை முதல் வேலையாக தனது அப்பாவுடன் பழனி முருகனை காண சென்றுள்ளார்.

கோவிலில் கார்த்தியைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு அவருடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement