• Apr 27 2024

தி லெஜண்ட் திரைப்படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?- சஸ்பென்ஸ் வைத்த ஜேடி - ஜெர்ரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட் . இப்படத்தில் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் அருள் நடித்துள்ளதோடு இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர்.

வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ள இப்படமானது 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு இப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, யோகி பாபு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை படு ஸ்பீடாக நடத்தி வருகிறார். 10 நடிகைகளை வைத்து சமீபத்தில் அவர் நடத்திய இசை வெளியீட்டு விழா வேற லெவலில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் யூனிவர்ஸல் கன்டென்ட் ஒன்று உள்ளது அதற்காகத் தான் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிடுகிறோம், நிச்சயம் அந்த விஷயம் அனைவரையும் ரீச் செய்ய வேண்டும் என லெஜண்ட் நினைத்ததால் தான் இப்படியொரு பிரம்மாண்ட படமே உருவானது என ஜேடி - ஜெர்ரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்

காதல், ஆக்‌ஷன், கதை, கருத்து என அனைத்தும் கலந்த பக்காவான கமர்ஷியல் படமாக இந்த படம் இருக்கும் என படத்தை இயக்கிய இயக்குநர்கள் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement