• May 10 2024

நடுரோட்டில் ரசிகன் செய்த செயலால் வியந்து போய் நின்ற பிரபு தேவா- இது போல பரிசு எதுவும் கிடையாது

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவராக விளங்குபவர் பிரபுதேவா. இவர் தற்பொழுது யங் மங் சங், பகீரா,ஊமை விழிகள்,முசாசி,ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரேக்ளா ஆகிய தமிழ்ப் படங்களிலும், லக்கி மேன் என்கிற கன்னடப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகிய மை டியர் பூதம் திரைப்படம் நாளைய தினம் ரிலீஸ் ஆகவுள்ளது.இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடயங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அப்பா சுந்தரம் தமிழில் நல்ல நடன இயக்குநராக பணியாற்றும் போது 11-ஆம் வகுப்பில் ஃபெயிலாகியுள்ளார் பிரபுதேவா. அடுத்து என்ன செய்ய போகிறாய் என்று அப்பா திட்டிவிட்டு, உன் வாழ்க்கையை நீதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினாராம். அப்போது, அப்பா நல்ல நடன இயக்குநராக இருக்கிறார். நாம் தமிழ் சினிமாவில் டாப் கோரியோகிராஃபர் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லையாம். இந்தியாவிலேயே டாப் கோரியோகிராஃபர் ஆக வேண்டும் என்று நினைத்ததாக கூறியுள்ளார் பிரபுதேவா

இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றவர்கள் ஒரு வேளை நடிகர்களாக இல்லாமல் நடன இயக்குநர்களாக இருந்திருந்தால், யார் உங்களுக்கு போட்டியாக இருந்திருப்பார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்போதும் நான் தான் என்று தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். உண்மையும் அதுதானே!அதே போல், உங்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் விஜய், அல்லு அர்ஜுன் அல்லது ஹ்ருத்திக் ரோஷன். இந்த மூவரில் யார் பிரபு தேவாவாக நடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மூவரும் இல்லை. அவரவர்களுக்கு தனி ஸ்டைல் உண்டு. எனக்கு தெரியவில்லை என்று பிரபு தேவா கூறியுள்ளார்.உங்களுக்கு கிடைத்த சிறந்த பாராட்டு எது என்ற கேள்விக்கு, ஒரு முறை மும்பையில் காரில் நண்பருடன் சிக்னலில் நின்று கொன்டிருந்தபோது, ஒரு கை மற்றும் கால் இல்லாதவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் தன்னை பார்த்ததும் கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு நடனமாடத் தொடங்கினாராம். உடனே அவரது நண்பர்,"மாஸ்டர்… இத விட உங்களுக்கு வேற என்ன பெரும இருக்கப் போகுது" என்று தன்னிடம் கூறியதாகவும், அந்த ஊனமுற்றவர் கொடுத்த மரியாதைதான் தனக்கு கிடைத்த சிறந்த பாராட்டு என்று பிரபுதேவா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement