• May 10 2024

கமல் தனது ரோலக்ஸ் மணிக்கூட்டை இந்தப் படத்தில் அணிந்திருந்தாரா?- அட இது தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுபமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் முன்னணி நட்சத்திரம் தான் கமல்ஹாசன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இவரது தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் உலகளவில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது, மேலும் தமிழகத்தில் விக்ரம் திரைப்படம் தற்போது அதிக வசூல் செய்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதி பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.சூர்யா ரோலக்ஸ் என்னும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.இக் கதாப்பாத்திரம் இந்தியளவில் பேசப்படும் அளவிற்கு பேமஸ் ஆகிவிட்டது.

மேலும் கமல் இதற்காக நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்து அவருக்கு மிகவும் பிடித்த ரொலக்ஸ் வாட்சை பரிசாக அளித்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பயங்கர வைரலானது.

இதற்கிடையே கமலின் அந்த வாட்ச் கமல் இதற்கு எந்த திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளனர் ரசிகர்கள். அதாவது கமல் அந்த வாட்சை மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement