• Oct 06 2024

காஞ்சனா 4 படத்திற்கு ஸ்கிரிப்ட் ரெடியா? மாஸ் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ருத்ரன், சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதாவது வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் படத்திலும், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இவை தவிர லாரன்ஸின் ஹிட் சீரியல் ஆன காஞ்சனா4 பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், தற்போது பென்ஸ் என ஒரு படத்தை தயாரித்துக் கொண்டுள்ளேன். அடுத்தது காஞ்சனா 4 படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றியும் பேசிய ராகவா லாரன்ஸ், ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு நடந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. இனி யாருக்கும் இதுபோன்று நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.




Advertisement

Advertisement