• May 01 2024

லோகேஷ் கனகராஜ் இந்த நடிகையுடன் டேட்டிங் போயிருக்கிறாரா?- நடிகர் சந்தீப் கிஷன் சொன்ன ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும், பான் இந்திய படம் “மைக்கேல்”. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோருடன் திவ்யான்ஷா கௌஷிக், வரலக்‌ஷ்மி சரத்குமார், வருண் சந்தீஷ்,  அனுசிய பரத்வாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.  சாம் CS இசையமைக்கும் இந்த படத்துக்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய,  திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி உலகெங்கும் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைக்கேல் படத்தின் நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, "சக நடிகைகள் உடன் டேட்டிங் சென்றிருக்கிறீர்களா?" என சந்தீப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சந்தீப்,"ஆமா, ஆனா யாருன்னு சொல்ல முடியாது" என புன்னகையுடன் தெரிவிக்கிறார்


இதனையடுத்து, "சார் டேட்டிங் போயிருக்காரா?" என லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் புன்னகைக்க, அருகில் அமர்ந்திருந்த சந்தீப்,"இவர் படத்துல ஹீரோயினே இருக்க மாட்டாங்க" என சொல்ல அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவருமே ஆரவாரம் செய்கின்றனர். தொடர்ந்து பேசிய அவர்,"மாநகரம் படம் பண்ணப்போ, என்ன செய்யணும்னு லோகேஷ் நடிச்சு காமிப்பாரு. லவ் சீன்ஸ் மட்டும் நானே பத்துக்குறேன்னு சொல்லிடுவேன். ஆனா எழுதும்போது ரொமான்டிக்கான ஆளு தான்" எனச் சொல்ல, லோகேஷ் "உன் படத்துக்காக வந்திருக்கேன்டா" என சிரித்தபடியே சொல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement