• Apr 20 2024

ஜெயம் ரவியின் 'இறைவன்' படம் வேற லெவலில் இருக்கும் - இயக்குநர் அஹமது ஓபன் டாக்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் ஐ. அஹமது இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் அஹமது இறைவன் படம் எப்படி பட்ட ஒரு திரைப்படம் என்பது பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்  ” இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும்.


நிச்சியமாக ஒரு த்ரில்லர் படமாக இருக்கும். இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அனைவரையும் ஈர்க்கும் வகையில், வந்துள்ளது. கண்டிப்பாக எல்லாருக்கும் பிடித்த ஒரு நல்லபடமாக இருக்கும். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வரும்” என மேலும் கூறியுள்ளார்.

இத்திரைப்படத்தினை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



Advertisement

Advertisement

Advertisement