• Apr 28 2024

விஜய் LCU வில் இருப்பது உண்மை தானா?- லோகேஷ் கனகராஜ் வைத்த டுவிஸ்ட்- இப்பிடி சொன்னால் எப்பிடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

 இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.லியோ திரைப்படத்தை அடுத்து தலைவர் 171 திரைப்படத்தை லோகேஷ் தான் இயக்கவுள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன.

ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கயிருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்க படுகின்றது.இருப்பினும் லியோ படத்தை முடித்தவுடன் லோகேஷ் கைதி 2 படத்தை தான் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 


 இதனை கார்த்தியே சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு பேட்டியில் கைதி 2 திரைப்படம் அடுத்தாண்டு துவங்கும் என கூறியிருந்தார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்.  மாஸ்டர் திரைப்படம் LCU வில் இணையுமா என கேள்வி கேட்கப்பட்டதை அடுத்து லோகேஷ், இல்லை மாஸ்டர் தனி படம் தான், LCU கிடையாது என்றார். 


மேலும் ரசிகர்கள் செய்யும் எடிட்ஸ்களை பார்க்கின்றேன், நான் அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வேன் என லோகேஷ் கூறியதை அடுத்து, கண்டிப்பாக லியோ திரைப்படம் LCU தான் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். அப்படி LCU வாக இருக்கும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Advertisement

Advertisement

Advertisement