• May 09 2024

ஓடிடியில் KGF-2 படத்தை பார்க்க இவ்வளவு கட்டணமா? ஷாக்கான சந்தாதாரர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் KGF-2தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் – இந்தியா படமாக KGF-2 வெளிவந்தது.

மேலும் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், தொடர்ந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது.இது ரசிகர்களிடத்தே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.இப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது

இந்த நிலையில் KGF-2 திரைப்படம் அமேசன் பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமென்ற அறிவிப்பு சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தாதாரர்களாக இருந்தாலோ அல்லது சந்தாதாரராக இல்லாமல் இருந்தாலோ ரூ.199 கட்டணம் செலுத்தி KGF-2 திரைப்படத்தை பார்க்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் அமேசான் பிரைமில் KGF-2 திரைப்படம் இடம் பெறவுள்ளது.

அத்தோடு KGF-2படத்திற்காக ரூ..199 கட்டணம் கட்டினால் மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவிப்பு சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement