• Jan 18 2025

பிக்பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் இவர் தானா?- வெளியாகிய வோட்டிங் விபரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நாளைய தினம் முடிவடைய உள்ளது. மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி தற்போது மாயா, விஷ்ணு, தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா ஆகிய 5 பேர் இறுதி வரை சென்றிருந்தனர்.

இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மேலும் விஜே அர்ச்சனா மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்இதன்மூலம் அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.


கடந்த சில வாரங்களாகவே அர்ச்சனாவிற்கு அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மக்களிடம் இருந்து அனைவரையும் விட அதிக வரவேற்பை பெற்ற அர்ச்சனா தற்போது பிக் பாஸ் 7 டைட்டில் ஆக போகிறார் என தெரிகிறது.

அர்ச்சனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் மாயா உள்ளார். இதன்பின் மூன்றாவது இடத்தில் விஷ்ணு இருக்க, நான்காவது இடத்தில் தினேஷ் மற்றும் ஐந்தாவது இடத்தில் மணி இருக்கிறார் என்று கூறப்படுகின்றது.இருப்பினும் இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement