தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என்ற அங்கீகாரத்துடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
விவாகரத்து செய்த பின்பும் கோபி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் இதனால் வந்து கொண்டிருக்கிறது.
இந்த காட்சிகள் தொடர்ந்து பரபரப்பாக சீரியல் ஓட காரணமாகி இருக்கிறது. குறிப்பாக பாக்கியா 18 லட்சம் பணத்தை எப்படி கோபிக்கு கொடுத்து வீட்டை மீட்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய விவரங்களை பார்க்கலாம். அதன்படி சீரியலில் சமீபத்தில் எண்ட்ரி கொடுத்த நடிகர் ரஞ்சித் தான் எல்லோரையும் தற்போது அதிகம் சம்பளம் வாங்குகிறாராம்.
ஹீரோயின் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு 15 ஆயிரம் ருபாய் சம்பளமாக பெறுகிறாராம்.வில்லன் கோபி ரோலில் நடிக்கும் சதீஷுக்கு 12 ஆயிரமும், ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு 12 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது.
செழியன் ரோலில் நடிக்கும் விஷாலுக்கு 10 ஆயிரம் ரூபாயும், ஜெனி திவ்யா கணேஷுக்கு 10 ஆயிரமும் ஒரு நாளுக்கு தரப்படுகிறது.செழியனுக்கு 10 ஆயிரம் மற்றும் இனியாவுக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!