• Sep 26 2023

கண் ஆப்பிரேஷன் செய்தது ஒரு குற்றமா?- மாமியாரை கைக்குள் வைத்திருப்பது எப்படி- தமிழா தமிழா ஷோவில் நடக்கவுள்ள சுவாரஸியம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கரு பழனியப்பன் அவர்கள் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது புது தொகுப்பாளருடன் ஷோ நடந்து வருகின்றது.

அதன்படி பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பின் கீழ் இரு அணியாகப் பிரிந்து விவாதம் நடத்தி வருவது வழமையே. அதன்படி இந்த வாரம் friendly மாமியார் மற்றும் lovely மருமகள் என்னும் தலைப்பில் வாதிடப்பட்டது.


அப்போது ஒரு மாமியார் தன் மருமகளைப் பற்றி கூறும் போது அவங்க முதன் முறையாக என்னை பார்த்த போது என் காலில் விழுந்தாங்க.அதனால பிடிச்சிருச்சு என்று மாமியார் சொல்கின்றார்.தொடர்ந்து  பேசிய இன்னொரு மருமகள் மாமியாரை அம்மா என்று சொன்னாலே பிர்ச்சினை வராது என்பதற்காகக் தான் அம்மா என்று சொல்கின்றோம் என்கின்றார்.


தொடர்ந்து தொகுப்பாளர் இதில் இருப்பவர்களில் யார் பொல்லாத மாமியார் போல தெரிகின்றார் ன்று கேட்ட போது அவர்கள் ஒருவரைச் சொல்லி அவருடைய பார்வையே சரி இல்லை என்று சொல்ல அவர் நான் கண்ணில் ஆப்பிரேஷன் செய்திருக்கிறேன். அதான் அப்பிடிப் பார்க்கிறேன் என்று சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement