• Sep 22 2023

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்தவர் இந்த பிரபலத்தின் மகன் தானா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 4 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தரமணி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் வசந்த் ரவி. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ராக்கி என்னும் படத்திலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல அடையாளத்தைப் பெற்றுக் கொண்டார்.


சமீபத்தில் அஸ்வின்ஸ் என்ற படத்தில் நடித்த இவருக்கு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.இதனால் இப்படத்தில் ரஜினியின் மகனாகவும் சைலன்ட் வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த படம் வசந்த ரவியின் திரைவாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் வசந்த் ரவி யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் தமிழகத்தில் பல்வேறு கிளைகள் கொண்ட பாரம்பரிய மிக்க ஹோட்டல் குழுமமான வசந்த பவன் நிறுவனர் ரவி முத்துகிருஷ்ணனின் மகன் தானாம்.


50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கி வரும் இந்த குழுமம் அண்மையில் 50 ஆண்டு நிறைவு விழாவை ஸ்விக்கி, சொமேடோ டெலிவரி செய்பவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களை கௌரவித்து இருக்கின்றார்கள்.வசந்த் ரவி இங்கிலாந்தில் Health Care Management படிப்பை முடித்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி இருக்கிறார்.பின் சினிமாவில் உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement