• May 06 2024

அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சியா? பற்ற வைத்த நடிகை ஊர்வசி- கழுவி ஊற்றத் தொடங்கிய ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜண்ட் .இப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.இப்படம் ஜுலை 28ம் திகதி மிகவும் பிரமாண்டமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ளனர்.2500 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு மிகவும் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றது.

ஹைதராபாத், மும்பை என பான் இந்தியா ரிலீசுக்காக பறந்து பறந்து பிரஸ்மீட்களை நடத்தி வருகிறார் லெஜண்ட் சரவணன். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் தி லெஜண்ட் படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா, கிண்டலாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. அடுத்ததாக தமிழ்நாட்டின் முதல்வராகவே இவர் ஆகிவிடுவார் என்று பேசியதும், லெஜண்ட் சரவணன், கொஞ்ச நேரம் சும்மா இரும்மான்னு சொல்லும் காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

"அடுத்த முதலமைச்சர் அண்ணாச்சிதான் - மும்பை ப்ரெஸ் மீட்டில் லெஜண்ட் நாயகி உறுதியாக சொன்ன தகவல். உதயநிதிக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறாரா அண்ணாச்சி?" என பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பேசிய வீடியோவை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது. தி லெஜண்ட் படத்துக்கு பலமான புரமோஷன் ஆரம்பிச்சிட்டீங்க போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement