• May 19 2024

''தி லெஜண்ட்'' படத்திற்கு சென்சார் குழு சான்றிதழ்…வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் சரவணன் அருள்.இவர் ‘தி லெஜண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார்.

மேலும் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகின்றது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதிரடி ஆக்சன் படமான இப்படம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும், தமிழகத்தில் 650 தியேட்டர்களிலும்,, உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

அத்தோடு , அதிகாலை 4 ம்ணி காட்சியும் உள்ளதால் அன்று நண்பகலுக்குள் இப்படத்தின் நிலவரம் தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

TheLegend Update

  • Censored ' U/A '
  • Runtime : 2 Hours 41 Minutes
  • TamilNadu 650+ Screens

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement