• Jan 19 2025

என்னடா இப்படியெல்லாம் விளையாடுறீங்க.? அன்பா விசாரிக்க தயாரான விஜய் சேதுபதி! தரமான சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வது நாளாக  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாளுக்கான முதலாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும்  காட்சிகளை பார்ப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலாக காணப்படுவார்கள்.

அந்த வகையில் தற்போது வெளியான முதலாவது ப்ரோமோவில், மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, முதல் வாரம் என்னடா இப்படி விளையாடுறீங்க என்று தோணுச்சு. அது ஏன் என்று கூப்பிட்டு விசாரிச்சோம். ஆனா இப்ப என்னடா இப்படி எல்லாம் விளையாடுறீங்க அப்படி என்று இருக்குது. இப்பதான் கொஞ்சம் விளையாட ஆரம்பிச்சிருக்காங்க.. அவங்க இன்னும் நிறைய விளையாடனும்.. அவங்கள கூப்பிட்டு என்ன ஏதுன்னு அன்பா விசாரிப்போம் என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்றைய தினம் செம சம்பவம் இருக்கு என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். ஆரம்பத்தில் பல கருத்துக்கள் காணப்பட்ட போதும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த பிறகு அவரை கொண்டாடி வருகின்றார்கள்.

எனவே இன்றைய தினம் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியார்களை எப்படி அன்பாக விசாரிக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement