• May 19 2024

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் கிடைத்த கௌரவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில்1400க்கும் மேற்பட்ட படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் தான் இளையராஜா 1970களில் அன்னக்கிளி என்ற படத்தில் துவங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் தற்போதுவரை தொடர்ந்து வரகின்றது.

80 வயதை எட்டிய நிலையிலும் அடுத்ததுடுத்து படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி வருகின்றார்.இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் அவர் இசைக் கச்சேரிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார். அவர் சமீபத்தில் ராஜ்யசபா நியமன எம்பியாக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

வானதி ஸ்ரீனிவாசன், பாரதிராஜா மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் அவரை விமானநிலையத்தில் வரவேற்று எம்பி நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான பாஜகவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். சில தினங்களில் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்பியாக இளையராஜா சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement