• May 18 2024

20 ஆண்டுகளிற்குப் பின்னர் மீண்டும் இணைந்த காதல் ஜோடி…வைரலாகும் புகைப்படங்கள்…வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் யாராலும் மறக்க முடியாத பிரபலங்களாக வலம் வருபவர்கள் பென் அஃப்லெக் மற்றும் ஜெனிபர் லோபஸ். இதில் பென் அஃப்லெக் பிரபல நடிகராகவும், ஜெனிபர் லோபஸ் பிரபல நடிகை மற்றும் பாடகியாகவும் விளங்குகின்றனர். பல நாள் காதலர்களான இவர்கள் இருவரும் 2002-ல் 'Gigli' என்ற திரைப்பட செட்டில்தான் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து 'Jersey Girl' என்ற படத்திலும் ஒன்றாக நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து பல காலம் ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் பிரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஜெனிபர் லோபஸ் அதே ஆண்டு மார்க் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் பென் அஃப்லெக் 2005 இல் ஜெனிஃபர் கார்னர் என்ற பெண்ணை மணந்தார்.

இவ்வாறாக இவர்கள் இருவரும் வெவ்வேறு திருமணங்களைச் செய்துகொண்டனர். ஆனாலும் இவர்கள் இருவரது மண வாழ்க்கையும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இதன் காரணமாக இருவரும் சில வருடங்களில் தாங்கள் திருமணம் செய்து கொண்டவர்களைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் பென் அஃப்லெக் புகழ்பெற்ற நடிகையான ஆனா டி ஆர்ம்ஸ் என்பவருடன் சில காலங்கள் டேட்டிங்கில் இருந்தார். எனினும் அந்த உறவு திருமணம் நோக்கி நகரவில்லை. இவ்வாறாக தொடர்ந்து பிரிவுகளை சந்தித்து வந்த ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்று ஒரு செய்தி வெளியாகி வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து 52 வயதான நடிகர் ஜெனிபர் லோபஸ் மற்றும் 49 வயதான பென் அஃப்லெக் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது லோபஸ் தமது திருமணத்தை தனது ரசிகர்களுக்கான செய்தி மடலின் மூலம் “We did it” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருக்கிறார். அத்தோடு லாஸ் வேகாஸில் நடைபெற்ற இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளிற்குப் பின்னர் மீண்டும் மண வாழ்க்கையில் இணைந்துள்ளமையால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement