• May 12 2024

படு குண்டாக இருந்த நடிகை அனுஷ்காவா இது…இணையத்தில் திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் முக்கிய நடிகையாக திகழ்ந்த அனுஷ்கா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவருக்கு தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

அறிமுக படைத்தத் தொடர்ந்து இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவற்றுள் பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வெற்றி பெற்றன.

இவர் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். அது மட்டுமல்லாது அவருடைய உயரமும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர பட வாய்ப்புகளும் வந்து குவிந்த வண்ணமே இருந்தன.

அதன்பிறகு படு குண்டாகி ஆளே மாறியிருந்தார். இன்ஸ்டாவில் சில நேரங்களில் புகைப்படங்கள் பதிவிடும் அனுஷ்கா சமீப காலமாக நல்ல ஆக்டீவாக இருக்கிறார்.

2020ம் ஆண்டு கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகி இருந்தது.கொரோனா தொற்று பிரச்சனைகளுக்கு பிறகு மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படம் நடிப்பதாக அறிவித்தார். அந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறார்கள், ஆனால் மற்றபடி வேறு எந்த தகவலும் வரவில்லை

எனினும் தற்போது இன்ஸ்டாவில் அனுஷ்கா ஒரு திருமணத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை குறைத்துள்ளது போல் தெரிகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement