• Feb 12 2026

பூஜா ஹெக்டேயின் கேரவனில் அத்துமீறி நுழைந்த ஹீரோ.. தொட முயன்றார்.! வெளியான பரபரப்பு பேட்டி

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இப்போது டாப்பில் இருக்கும் ஹீரோயின்களில் ஒருவராக விளங்கும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் தன்னைப் பற்றிய ஒரு முக்கியமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


அவரின் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூஜா ஹெக்டே அந்தப் பேட்டியில், “நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பான் இந்தியா படத்தில் நடித்தேன். அப்போது ஒரு நட்சத்திர ஹீரோ எனது கேரவனுக்குள் என்னை கேட்காமல் நுழைந்துவிட்டார். நுழைந்தது மட்டுமில்லாமல், அத்துமீறி என்னை தொடவும் முயன்றார். நான் உடனே கோபமாகி அவரை அறைந்துவிட்டேன். அதற்கு பிறகு அந்த ஹீரோ என்னுடன் பணியாற்றவில்லை.” என்று கூறியிருந்தார். 

இந்த சம்பவம், நடிகையின் தனிப்பட்ட உரிமையை மீறி நட்சத்திர ஹீரோ செயல்பட்டதைக் காட்டுகிறது. அத்துடன் பூஜா ஹெக்டே தனது பேட்டி மூலம்,  திரையுலகில் பெண்கள் பல சமயங்களில் எதிர்கொள்ளும் அத்துமீறல்களை கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement