• Feb 03 2025

பெண்களின் இடுப்பை கிள்ளி நடிச்சிருந்தா நானும் பெரிய ஸ்டார் ஆகியிருப்பேன்! சித்தார்த்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சித்தார்த் நடிப்பில் இறுதியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதில் கமலஹாசன், சமுத்திரகனி, ப்ரியா பவானி சங்கர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனாலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியது. அது மட்டும் இல்லாமல் கமலஹாசனின் சினிமா கேரியரில் இந்த படம் தான் அதிகளவான ட்ரோலுக்கு உள்ளானது.

இதைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த் அதிதி ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுடைய திருமணம் எளிமையாக நடைபெற்ற போது திருமண வரவேற்பு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்பு இருவரும் ஜோடியாக சென்று வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்த நிலையில், நடிகர் சித்தார்த் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாக உள்ளது. அதில் அவர் கூறுகையில், பெண்களின் இடுப்பை கிள்ளுவது, அடித்துக் கொடுமைப்படுத்துவது பெண்களை கட்டுப்படுத்துவது போன்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடிப்பதில்லை. 

நான் எப்போதுமே பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடப்பவன். அதை மீறும் வகையிலான வேடங்களில் நான் ஒருபோதும் நடிப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடித்து இருந்தால்  எப்போதோ நான் பெரிய ஸ்டார் நடிகராகி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்பட மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இதில் அவருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. 

Advertisement

Advertisement