• Feb 03 2025

நடிகை அனுபமாவாவின் ட்ரெண்டிங் லுக்.. கவனம் ஈர்க்கும் புது போட்டோஸ்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் அனுபாமா பரமேஸ்வரன். இவர் தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கொடுத்தவர். அதன் பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனுசுக்கு ஜோடியாக கொடி, ஜெயம் ரவியுடன் சைரன், அதர்வாவுடன் தள்ளி போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


மேலும் டில்லு ஸ்கொயர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த தெலுங்கு திரை உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் திரைப்படத்திலும், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் டிராகன் படத்திலும் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அனுபாமா பரமேஸ்வரன் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement