மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா தொடர்பான விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பிடத்தக்க வகையில், ரங்கராஜ் தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாத நிலையிலேயே இந்த திருமணம் நடந்ததாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது டி.என்.ஏ பரிசோதனை. குழந்தை தன்னுடையதா என்பதை உறுதிப்படுத்த டெஸ்ட் நடத்த வேண்டும் என்று கூறியிருந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஆரம்பத்தில் தாமதம் செய்ததாக ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார். பல மாதங்களுக்குப் பிறகு அவர் டெஸ்டில் கலந்து கொண்டார்.
இறுதியாக வெளியான டி.என்.ஏ பரிசோதனை முடிவில், குழந்தை ரங்கராஜின் குழந்தை தான் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டது. இதன் மூலம், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பதும் தெளிவானது.
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதில், ரங்கராஜ் தனது மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இனிமேல் வாழ்க்கை முழுவதும் மகனுடன் இருப்பேன் என்று உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தையை ஒருபோதும் விட்டு பிரியமாட்டேன் என்றும் அவர் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அடுத்ததாக என்ன நடக்கும் என்பது குறித்து அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Listen News!