• May 01 2024

'அனைவரும் சமம் என்ற கருத்தைத் தான் கூற வந்தேன்'-கடும் சோகத்தில் சாய் பல்லவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஹிந்தியில் வெளிவந்த காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து துணிச்சலாகப் பேசியிருந்தார்.

அதாவது “காஸ்மீர் பைல்ஸ் படத்தில் ஹிந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போல காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்லாமியர் ஒரு மாட்டைக் கொண்டு சென்ற போது ஒருசிலர் அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி துன்புறுத்தினார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது” என்று துணிச்சலுடன் பேசியிருந்தார்.

இதனால் பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் சிலர் இவரின் கருத்திறை்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த கன்டனத்திற்கு பதில் கொடுக்கும் முகமாக சாய்பல்லவி முதன் முறையாக வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது
நான் அந்த பேட்டியில் குறித்து பேசிய விடயம் தவறான முறையில் பார்க்கப்பட்டு வருகின்றது. அதற்கு தெளிவான ஓர் விளக்கத்தைக் கொடுக்கவே இந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளேன். நான் பேசிய ஒரு விடயம் நீண்ட பிரச்சனையை உருவாக்கி வருகின்றது. நான் மனிதாபிமான அடிப்படையில் தான் துன்புறுத்தல் பற்றி பேசினேன்.

மேலும் அந்தப் படத்தை பார்த்தபோது நான் மிகவும் குழம்பிப் போனேன் காரணம் அந்த காலத்து மக்கள் எவ்வளவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் மதத்திற்கிடையே பிரச்சினையை ஏற்படுத்துவது போல இதனைக் கூறவில்லை.

அனைவருடைய வாழ்க்கையும் முக்கியமானது என்பது எனக்கு தெரியும். எனக்கு நல்ல நினைவிருக்கின்றது. நான் பாடசாலையில் படிக்கும் போது அனைத்து இந்தியர்களும் நமது சகோதர சகோதரிகள் அனைவரும் ஒன்று தான் என்று படித்திருக்கின்றேன். அது எனது மூளையில் ஆளமாகப் பதிந்த விட்டது. எனக்கு அனைவரும் சமம் என்ற கருத்தில் தான் அதை கூறினேன்.

ஆனால் நான் பேசிய கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்படுவது ரொம்ப கஷ்டமாக இருக்கு. எனக்கு ஆதரவாகப் பேசியவர்களுக்கும் என்னுடைய கருத்தினைப் புரிந்து கொண்டவர்களுக்கும் மிக்க நன்றி. எப்போதும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருங்கள் என்றும் அந்த வீடியோவில் அவர் மனமுருகிப் பேசியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement