• Jun 14 2026

ராமர் என்பவர் வெறும் கதாபாத்திரம் அல்ல..– "ராமாயணா" படம் குறித்து ரன்பீர் கபூர் பேச்சு!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘Ramayana’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பகுதிகளாக வெளியாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராமராக ரன்வீர் கபூர் நடித்திருப்பது ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் கபூர் , தனது கதாபாத்திரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “ராமர் என்பது ஒரு சாதாரண கதாபாத்திரம் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் உருவம். கருணை, தைரியம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமான ஒரு மனிதரை நடிப்பது எனக்கு பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் ரன்பீர் கபூரின் இந்த அணுகுமுறையை பாராட்டி வருகின்றனர்.

பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த ‘Ramayana’ திரைப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் காட்சியமைப்பிலும் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி வெளியீட்டை முன்னிட்டு, இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement