தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான பப்லு பிருத்விராஜ், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார். ஹீரோவாக இருந்த அவர், தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார்.57 வயதை கடந்துவிட்டபோதும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர்.


தற்பொழுது சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அத்துடன், தன்னைவிட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணுடன் லிவிங் லைப்பில் வாழ்ந்து வந்தார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தொடர்ந்து அவருடன் இணைந்து சமூக வலைதளங்களில் அதிகமான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் பப்லு. எனினும் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தனித்தனியாக அறிவித்துள்ளனர். இவர்களின் பிரிவுக்கான காரணத்தை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பப்லு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
நான் நிறைய ஏமாந்துட்டேன். இனிமேலும் திருந்தலன்னா நான் முட்டாள் என வருந்தியுள்ளார். மேலும், நான் இவ்வளவு நாள் தப்பு பண்ணிட்டன். ஆனா லாஸ்ட் டைம் நான் எந்த தப்பும் பண்ணல, வெளிப்படையா இருப்பன். இத வச்சு சிம்பதியோ, நீங்க கிண்டல் பண்ணுவீங்க என்டோ நான் உண்மைய சொல்ல தயங்க மாட்டன்.

இனி நான் என்னை மட்டுமே கவனிக்க கவனிக்க போறன். இப்ப தான் நான் சரியான பாதையில போறன். ஆனா என்ட கோமணத்த தெருவில கழுவ விரும்ப என சொல்லி உள்ளார். இதன் மூலமே, அவர்களுடைய பிரிவு பற்றி அவர் எதையும் சொல்ல விரும்பவில்லை என்பது நிரூபணமாகிறது. அத்துடன், அது ஏனையோருக்கு தேவ இல்லாத விசயம் எனவும் சொல்லியுள்ளார்.
அத்துடன், நான் ஒரு விஷயம் சொன்னா அத 10 பேர் நல்லா எடுப்பாங்க 10 பேர் தப்பா எடுத்து கழுவி ஊற்றுவாங்க..அது நமக்கு தேவ இல்லை. மேலும் எனக்கும் சீத்தலுக்கும் பிரச்சனை என்று யார் சொன்னா? நீங்களே முடிவு எடுப்பிங்களா என விளாசியும் உள்ளார்.
அத்துடன், தனக்கு இறுதியாக நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம், எனக்கு எதிர்பாராத விதமாக செய்யப்பட்டது. அதற்கு 11 லட்சம் செலவளித்ததாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, தனது இளம் காதலியின் பிரிவு குறித்தும், அவரை பிரிந்த காரணம் குறித்தும் கொஞ்சம் கூட வார்த்தை விடாதவராக பேட்டியை நகர்த்திக் கொண்டு முடித்துச் சென்றுள்ளார் பப்லு.
Listen News!