• Jun 04 2023

நான் தான் ஹீரோ என்று சொல்லும் போது நம்பவே இல்லை- சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என ஓபனாக பேசிய வெற்றி

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. சாதாரண குடும்பத்தின் நிகழும் வாழ்க்கைப் பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றது.

இதில் கதாநாயகன் முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெற்றி. ஆரம்பத்தில் பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் மூலம் தான் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இந்த சீரியலில் நடிக்கிறதுக்காக போன் பண்ணி எனக்கு போட்டோ அனுப்ப சொன்னாங்க. அனுப்பினேன். பின்பு போன் பண்ணி வரச் சொன்னாங்க. சிறகடிக்க சீரியல் இயக்குநர் குமரன் சேரின் மனேஜர். 

நானும் அவர்கிட்ட எதுக்காக வரச் சொல்லுறீங்க என்று கேட்ட போது தான் இப்படி புது சீரியல் ஒன்று எடுக்கப் போறோம். அதுக்கு நீங்க தான் ஹிரோ என்று சொன்னதும் எனக்கு நம்ப முடில. சரி என்று சொல்லி கிளம்பி அங்க போக ஒரு ரூமுக்குள்ள போக சொன்னாங்க. நானும் போய் பார்த்தால் அங்க எல்லாம் அழகான பசங்களா இருந்தாங்க.


எனக்கு பக்குன்னு ஆச்சு, அப்போ நாம ரியக்ட் தான் போல என்று சொல்லும் போது சேர் வந்து அவர் தான் ஹீரோ என்று சொன்னாரு. அப்போ இவங்க எல்லாம் யாரு என்று கேட்டேன். இவங்க எல்லாம் உங்க கூட நடிக்கிறவங்க என்று சொல்லும் போது எனக்கு அப்பிடியே சந்தோஷம் தாங்க முடில என்ம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement