• Jun 04 2023

புஷ்பா பட ஸ்ரீவள்ளி கதாபாத்திர சர்ச்சைக்கு அறிக்கை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்... ராஷ்மிகா போட்ட க்யூட்டான பதில்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், மிகவும் சிறப்பாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேச்சுக்கு, ராஷ்மிகாவின் ரசிகர்கள் பலர், ரஷ்மிகா மந்தனா மிகவும் அருமையாகவே ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாக, தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து, ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையாக விமர்சித்து வந்தனர். 


இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாற, இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் அவர் "சமீபத்தில் நேர்காணலின் போது என்னிடம் தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.


இருப்பினும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக பலராலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை சொல்லவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் உண்டு என்பதையும், திரையுலகை சார்ந்த சக நடிகர்கள், நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த அறிக்கையை பார்த்த ராஷ்மிகா மந்தனா அதற்கு கீழே கமெண்ட் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதில் "இப்போதுதான் இந்த அறிக்கையை பார்த்தேன். நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நான் நன்றாகவே புரிந்துகொண்டேன், மேலும் இதற்காக விளக்கம் அளிக்க தேவையில்லை என்றே நான் விரும்புகிறேன், உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் ஃபர்ஹானா படத்திற்கு வாழ்த்துக்கள்" என ரொம்ப கூலாக இப்பதிவின் மூலம் பதிலளித்திருக்கின்றார் ராஷ்மிகா.


Advertisement

Advertisement

Advertisement