• May 04 2024

நான் அவரை பார்க்க தான் போனேன் வாரிசு படத்தில் நடிக்கவில்லை- அதிர்ச்சித் தகவலைக் கூறிய பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு.விஜய் முதல் முறையாக தெலுங்கு இயக்குநர் படத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களியே அதிகமாகக் காணப்படுகின்றது. அத்தோடு குடும்ப படமாக இருக்குமோ என்றும் ரசிகர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது


இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடித்துள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய், பிரபு, சரத்குமாருடன் குஷ்பூ இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிக்கவில்லை என்றும், படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தான் சென்றேன் என்று குஷ்பூ கூறியுள்ளார்.படப்பிடிப்பு சென்றபோது விஜய்யுடன் அந்த புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குஷ்பூவின் இந்த பதில் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement