• May 18 2024

ஆதிபுருஷ் இயக்குநரை கோபமாக அறைக்கு அழைத்த நடிகர் பிரபாஸ்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிய சினிமாவில் பாகுபலி என்னும் படத்தின் மூலம் உலக ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருபவர் தான் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நடிகராகவும் வலம் வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆதிபுருஷ்.

இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகியிருந்து. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.மேலும் ராவணனை முற்றிலுமாக மாற்றி, சைப் அலிகானின் ராவணன் கேரக்டரை கில்ஜியாகக் காட்டி, க்ஷத்திரிய ராமனை பிராமணனாக்கி, ஆஞ்சநேயரின் மீசையை பிய்த்து மதம் மாற்றியிருக்கிறார்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் பிரபாஸ் கோபப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கோபத்தில் இயக்குநர் ஓம் ரவுத்தை அவர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வின் வீடியோவில் டீசர் வெளியானதும், கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்த பிரபாஸ் இயக்குநரிடம் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

 பிரபாஸ் கோபமாக ஓம் என் அறைக்கு வா என்று கூறுகிறார். 500கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக இருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.அத்தோடு பிரபாஸின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவர் இப்படி கோபமாக பேசியதை பார்த்தே இல்லை எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement