சிறு வயதில் இருந்தே, நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ரமேஷ், நடனக் கலைஞராக வர வேண்டும் என்கிற ஆசையில், திரைப்படங்களை பார்த்து பயிற்சி பெற்று தன்னுடைய நடன திறமையை மெருகேற்றிக் கொண்டு, சினிமாவிலும் வாய்ப்புத் தேடியுள்ளார். சில ஆண்டுகள் முயன்றும், வாய்ப்பு கிடைக்காததால் கூலி வேலை செய்து வந்துள்ளார். பின்னர், பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வந்துள்ளார்.
ரமேஷின் அபாரமான நடனத் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக இவரது நண்பர்கள் மற்றும் பகுதிவாசிகள், ரமேஷின் டான்ஸ் வீடியோவை எதார்த்தமாக டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வெளியிட, அது ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, ரமேஷ் சமூக வலைதளங்களில் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானார். சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் இவரது டான்ஸ் வீடியோக்கள் ஓடின.
இதனை அடுத் ஷு தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தது. இவ்வாறு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் மேல்மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இவருடைய இழப்பு இவருடைய ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது
இவர் ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் படத்தில் சிறுகதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து இவரது மனைவி பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அதில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் போது நடந்த சுவாரஸியமான சம்பவங்கள் குறித்து கூறியுள்ளார்.
அதாவது ஜெயிலர் படத்தில் நடிக்க நெல்சனின் மேனேஜர் போன் பண்ணி ஷுட்டிங் இருக்கு நீங்க வரனும் என்று எங்க ரமேஷ் கிட்ட சொன்னாங்க, அப்போ அவரு ரஜினியின் ஜெயிலர் படத்தில் உன்னை நடிக்கக் கூப்பிடுறாங்க என்று சொன்னாரு நான் நம்பவே இல்லை. அதனால என்னை ஷுட்டிங் கூட்டிட்டு போனாரு. முதல் ரஜினி சேர் வரல. அப்போ நான் கேட்டேன் நீ வேற யாருடைய படத்தில் நடிக்கப்போற என்று சொன்னேன். அதுக்கு பிறகு மறுநாள் கூட்டிட்டு போகும் போது தான் ரஜினி சேரைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்திச்சு.
ஷுட்டிங் முடிஞ்சதுக்கு பிறகு ரஜினி சேர் ரமேஷ் முதுகில் தட்டி பாராட்டினாரு. அப்போது அதில நிற்கிறவ என் மனைவி என்று சொன்னாரு,எனக்கு ரஜினி சேர் கையைக் காட்டினாரு. அதை என்னால மறக்கவே முடியாது. ரொம்ப சந்தோஷமாக இருந்திச்சு. இந்த வாய்ப்பு எல்லாம் எனக்கு ரமேஷ் மூலம் தான் கிடைச்சிச்சு, ரமேஷ் இப்போ இல்லை என்று நினைக்கும் போது தான் ரொம்ப கவலையாக இருக்கு. இருந்திருந்தால் நல்ல வாய்ப்புக்கள் கிடைத்திருக்கும் என்றும் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!