• Sep 13 2024

திருமணத்திற்கு ரெடியான s.j surya , இப்படியொரு லட்சியத்தைக் கொண்டிருந்தாரா?- பல நாட்களுக்குப் பின்னர் வெளிவந்த ரகசியம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவர் தன்னுடைய கல்லுாரிப் படிப்பை முடித்த பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னையிலேயே இருந்து வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தார். செலவுக்கு என்ன பண்றது என யோசிக்கையில்தான் ஒரு ஹோட்டலில் கேஷியராக வேலைக்கு சேர்ந்தார்.

வேலை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இயக்குநர்களை சந்தித்து வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருந்தார்.இதனால் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகசச் சேரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பின்னர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.


இப்படம் மிகப் பெரிய வெற்றி கொடுத்ததால் விஜய்யை வைத்து குஷி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இருந்தாலும் இரண்டு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தோம் என்ற இருமாப்பு எல்லாம் கொள்ளாமல் எப்படியாவது நடிகராக சாதிக்க வேண்டும் என படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் மக்களை அந்தளவுக்கு ஈர்க்கவில்லை.


பிறகு தனது டிராக்கையே மாற்றினார். வில்லனாக அவதரித்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். இத்தனை போராட்டங்களை எதிர்கொண்டு இன்று ஒரு சிறந்த நடிகராக நிற்கிறார் சூர்யா. ஆரம்பத்தில் கல்யாணம் என்ற பேச்சு வரும் போது இதுதான் அவர் மனதில் இருந்ததாம்.

ஒரு  நடிகராக எப்போது வெற்றியடைகிறேனோ அதன் பிறகு தான் கல்யாணம் என்று முடிவெடுத்திருந்தாராம். இப்போது லட்சியத்தில் வெற்றியடைந்த சூர்யா வாழ்க்கைத்துணையை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement