• May 19 2024

தனுஷை நினைத்து மிகவும் பெருமைப்படுகின்றேன்- பிரபல அரசியல் பிரமுகர் அன்புமணி ராமதாஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இறுதியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அத்தோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்து வருகின்றது.

மேலும் தனுஷ் நடிப்பில் சில நாட்களுக்கு முதல் வெளியாகியிருந்த திரைப்படம் தான் அவெஞ்சர்ஸ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து எவிக் சான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


கொடூர கொலையாளியாக தனுஷ் நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷை பாராட்டி வருகின்றனர். தி கிரேமேன் சீக்குவலிலும் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக ரூஸோ சகோதரர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷை பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில் The GrayMan திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தேன். ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷைப் பற்றி பெருமைப்படுகிறேன். நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் மேலும் பல விருதுகளை தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு கொண்டு வர எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஏராளமான ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் குவித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்  தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement