• May 08 2024

“என்னை இப்படி கூப்பிடுவது எரிச்சலாக இருக்கிறது…” கடுப்பான சித்தார்த்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் படித்தவர் தான் சித்தார்த்.இந்த படம் பாமிலி ஆடியன்ஸிற்கு பிடித்துப் போக அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.

அதன் பிறகு மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சித்தார்த். 180 படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.

அப்போது இவர் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டுமஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை நிலநடுத்திக்கொண்டார் நடிகர் சித்தார்த்.

அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்கள் இவருக்கு மறுப்ியும் நல்ல பெயரை பெற்று தந்தது. சித்தார்த் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும், பல படங்களுக்கு டப்பிங் கொடுத்தும் வருகிறார்.

அத்தோடு தி லயன் கிங் படத்தில் சிம்பா சிங்கத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் சித்தார்த். பலமுறை சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். இப்போது தன்னை சாக்லேட் பாய் என்று கூப்பிட்டால் தனக்கு பிடிக்காது என்றும் அப்படி கூப்பிட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது என்றும் மனம் திறந்து தெரிவித்துள்ளார்..

இவ்வாறு இருக்கையில் தன்னை சாக்லேட் பாய் என்று ரசிகர்கள் கூப்பிடுவது குறித்து நடிகர் சித்தார்த் கூறுகையில் நானும் 17 வருஷமா மாங்கு மாங்குன்னு நடிக்கிறேன்.ஆனால் என்ன பாக்கும்போது சாக்லேட் பாய் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.

மேலும் எனக்கு அப்படி கூப்பிட்டாலே எரிச்சலாக தான் வருகிறது. என்ன பொறுத்தவரை சாக்லேட் பாய் என்பது ஒரு தப்பான வார்த்தை. ஒரு நடிகரை பார்க்கும்போது அவர்களிடத்தில் இருக்கும் திறமையை குறிப்பிட வேண்டுமே தவிர சாக்லேட் பாய் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சாக்லேட் பாய் பட்டத்தை உடைக்க பல வருடங்களாக போராடி வருவருவதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். கண்டிப்பாக அந்த படத்தை நான் உடைத்தெறிவேன் என்று என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement