• Jan 19 2025

இவர் தான் சூப்பர் ஸ்டாரின் அப்பாவா? முதன் முறையாக சோசியல் மீடியாவில் அவுட்டான புகைப்படம்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனலாம்.

நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் பாலசந்தர் தான். தொடர்ந்து படவாய்ப்பைப் பெற்று வந்த இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தத்தையும் பெற்றுள்ளார்.


இவர், இறுதியாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

ரஜினிகாந்த் நடிப்பைத் தாண்டி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய உடல்நிலை கருதி அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக அறிவித்து விட்டார்.


தற்போது, இன்னும் ஒரு சில நாட்களில் 'லால் சலாம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயற்றி இருந்தார். 

இந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின், தந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. 

அதன்படி, ரஜினிகாந்த் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இவர் தான் சூப்பர் ஸ்டாரின் அப்பாவா? என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement