• Sep 28 2024

தளபதி 69 இப்படித்தான் இருக்கும்! உண்மையை உடைத்தார் எச்.வினோத்தின் நண்பர்...

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. விஜய்யின் கடைசி திரைப்படத்தை  எச்.வினோத் தான் படத்தை இயக்கவுள்ளார் என கிட்டத்தட்ட முடிவானது.


சதுரங்கவேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான எச்.வினோத் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். எச்.வினோத்தின் படங்களில் சமூகம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் இருக்கும். மேலும் விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவராகவும் இருப்பதால் கண்டிப்பாக எச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 69 ஒரு புரட்சிகரமான படமாக இருக்கும் என்றே தெரிகின்றது.


இந்நிலையில் எச்.வினோத்தின் நண்பரும் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனருமான சரவணன் என்பவர் தளபதி 69 படத்தை பற்றி பேசியிருக்கிறார். விஜய்யை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு வந்ததையும் அவர் மிகவும் சாதாரணமாக தான் சொன்னார். மேலும் தளபதி 69 திரைப்படம் பக்காவான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement

Advertisement